Friday, May 29, 2020

தூக்கணாங் குருவி பறக்கையில

மச்சான் ஒன்னைப் பாக்காம
மயக்கற கொரலக் கேக்காம
வாடி நின்னேன் வயலோரம்
பாடிக் களச்சேன் புகழாரம்.

தூக்கணாங் குருவி பறக்கையில
மூக்கணாங் கயிறு அழைக்கையில
மனசோ எதுலயும் லயிக்க இல்ல
தினுசா இருக்கு , புரிய இல்ல.

பாவி கம்மாக் கரையோரம்
கூவி அழச்சேன் ஒன் பெயர
பாத்தியில் ஒன்ன எதிர்பார்த்து
காத்துக் கெடந்தேன் கண் அயர.

கன்னு தேடும் பசு போல
ஒன்னத் தேடுதுது இம்மனசு
இன்னும் தாமதம் ஏன், ராசா?
வந்து அணச்சிடு பதவீசா.


No comments:

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...