ஆதி சங்கரா!!
==========
காலடியில் கால் வைத்து எமக்கெல்லாம்
நாலடியில் பல நாமம் தந்தாய் - சங்கரா.
நீரடியில் நின்றும் தாகம் தீரா எமக்கு
நிழலடி யாய் நின்று நெகிழ வைத்தாய் .
ஓரடியில் உலகளந்த வாமனன் பூமியில்
தேரடியில் உறங்கும் தேர் போல் அல்லா - குரு
தாழடியில் தஞ்சம் புகுந்திட, பல ஊர்
காலடியில் கடந்து நீயே சென்றாய் .
மண்ணடியில் மாய்ந்து மறையும் முன்னே
விண்ணடியில் நீங்கிலா இடம் கொண்டாய்.
தன்னடியார்க்கு அருளும் காமாட்சியின்
பொன்னடியில் எமக்கும் இடம் வகுத்தாய்.
-திலீப்-
No comments:
Post a Comment