Saturday, May 22, 2021

இன்சொல்

காற்றிற்குத் தெரியாது - தீயை ஊதினால் 

காடே எரிந்து சாம்பலாகும் என்று.


பெருமழைக்குத் தெரியாது - வெள்ளத்தால் 

பெருந் சேதம் விளையும் என்று.


நுணலுக்குத் தெரியாது - தன் குரலால் 

அரவத்திற்கு அழைப்பு விடுகிறோமென்று.


மனிதன் நாக்கும் அறியுமோ - மற்றவர் 

மனதை ரணமாக்குகிறோமென்று?


-திலீப்-


நுணல் - frog 

அரவம்- snake 

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...