Tuesday, February 12, 2013

பிறவிப் பெருங்கடல்


உன்
உதிரத்தைப் பாலாக்கி எனக்கு
ஊட்டிய 
உத்தமியே!

இவ்வுலகில் உனக்கு நிகர் நீயே! 
அடுத்த ஜென்மத்தில் 
உன் தாயாக நான் ஜனிக்க 
ஆண்டவன் 
அருள்வானா?

பிறவிக் கடனில் 
பாதியேனும் 
போக்க
பாக்கியம் கிட்டுமா?


பெருமான் கையில்
நீயொரு கருவி-
உன் கற்பத்தில்
நானும் ஒரு பிறவி.

போதுமடி தாயே
பிறவிப் பெருங்கடலில்
பேதையாய்ப்
பரிதவித்தது.


சீவிதத்தில் 
சாதிக்க இனி
ஒன்றும் 
இல்லை.

உன்னுள்ளிருந்து
எவ்வாறு
எனை
உருவாக்கினாயோ
அவ்வாறே எனை
ஆட்கொள்வாயா?

நீ பெற்றெடுத்த
இந்த ஆத்மாவுக்குப்
பிறவா வரத்தையும் 
பெற்றுத் தருவாயா?


D❣













No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...