Saturday, March 30, 2013

ஆணவம்

கோவில் த்வஜஸ்தம்பத்தின் முன்
சரணாகதியின்
சின்னம்மாக
கும்பிட்டு விழுந்தேன்.
மனமோ-
என்னை
எத்தனைப் பேர்
ஏறிடுகிராகள்
என
எண்ணிப் பார்த்தது.

==========

என் மாடத்தில் 
பூத்த ஒற்றைப்
பூவைப்
பார்த்து
பெருமிதம் கொண்டேன்.

பூப்
பூத்ததோ
பிரபஞ்சத்தின் 
பேரியக்கதால்தான்
என ஏன் உணரேன்?

ஏதோ ஒரு பறவை
விதையை
விட்டுச்சென்றது

ஏதோ ஒரு மேகம்
தண்ணீரை
தாரித்தது

ஆதவன் தன்
உடலை
உருக்கி
ஒளி கொடுத்தான்

தென்றல்
தினமும்
தொட்டிலிட்டது.

செடியோ தன் கடமையைச்
செவ்வனச்
செய்தது

இதில் பெருமிதம் கொள்ள
என் பங்குதான்
என்னவோ?










No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...