Thursday, March 7, 2013

எல்லாம் அவன் செயல்


இங்கு
நிசப்தமே
நிலவட்டும்.

புவியைப்
படைத்த
பெருங்குயவனே
பேசட்டும்.

அவனே
மண்ணையும்
படைத்தான்

சக்கரத்தையும்
சுற்றினான்.

வனைந்தும்
கொடுத்தான்.

பானைகளைப்
பெருக்கினான்.

ஒருநாள்
மண் பானை
சிதைந்து
மண்ணாகத்தான்
போகிறது.

பிறகேன்
இந்த விளையாட்டு
எனக் கேட்க
எத்தனிக்கிறாயா?

அவனே குயவன்
அவனே மண்
அவனே சக்கரம்
அவனே சுழற்சி.

கேள்விக்கு
இடமேது?

நிசப்தமே
நிலவட்டும்
சக்கரம்
சுற்றட்டும்.












No comments:

இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும் ஒரு நினைவு.

 இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும்  ஒரு நினைவு.  சுமார் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன், கொல்லிடம் ஆற்றங்கரையில் வாழ்ந்தோர் அங்கிருந்த பெருமாளின்...