Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்

 வனம் தங்கியதால் வானம் பொழிகையிலே 

மனம் நனையுது நன்றி மழையிலே.

தனம் வருகுது உழவன் கையிலே

இனம் திளைக்குது உவகையிலே.


மங்கும் ஒளியில் சொக்கப்பானை

இங்கும் அங்குமாய் மிளிர்கையிலே

எங்கும் கதிரின் அறுவடையிலே

பொங்குது மருதம் மகிழ்ச்சியிலே.


பொன்னி அரிசி மண் பானையிலே 

வெல்லத்துடன் சேர்ந்து கொதிக்கையிலே.

கரும்பும் கருத்தும் சுவைக்கையிலே 

அரும்பது புன்னகை இதழ்களிலே .










 





No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...