Monday, May 15, 2023

கஞ்சரளத்தைக் காணாய்.

கோதாக் கரையில் கொலு வீற்றிருக்கும் 

குகனின் தமையன் குணக்குன்றவனே 

புந்தியில் சுமக்கும் புண்ணிய பூமியாம் 

கஞ்சரளத்தைக் காணாய்.


மைத்திலியும் அவள் மைத்துனனுடனும்

மாருதியம் பல வானர சேனையும்

புடைசூழ் அருளும் புருஷோத் தமனின்  

கஞ்சரளத்தைக் காணாய்.


சங்குடனே தவச் சக்கரம்  சேர்ந்திட  

திருவிளை யுடனே தரிசனம் தந்திடும்  

ஒப்பிலி அப்பனின் ஒளிரும் தலமாம்  

கஞ்சரளத்தைக் காணாய்.


பிரமிக்கமிகு மதிலும் பிராகாரங்களும் 

வியக்க வைத்திடும் விண்ணுயர் விமானமும்

கதவும் கொண்ட கரிய செம்மலின்   

கஞ்சரளத்தைக் காணாய்.


புன்னை வனமும் பொலிவைக் கூட்டிட

கிருட்டினக் கிரீடமும் கீர்த்தியைப் பாடிட 

துளசிக் கொத்தே தூரிகை ஆகிய -இராம 

கஞ்சரளத்தைக் காணாய். 


கலி  காலத்தின்  நில வைகுண்டம்,

பொலி வுடன் திகழும் புருஷோத் தமனை

விழுந்து வணங்கிட வெண்டனே வாராய் -

கஞ்சரளத்தைக் காணாய். 

 

தஞ்சம் புகுந்தாரைத் தாங்கிப் பிடித்திடும் 

இராம தாசனை இனிதே  இரட்சித்திடும்

தயரதன் மகன் இவன் தரிசனம் தந்திடும் -

கஞ்சரளத்தைக் காணாய். 



 



No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...