Tuesday, May 16, 2023

தடியடி தாளத் திராணியோ இல்லை

தடியடி தாளத் திராணியோ இல்லை,

கன விரைவில் வந் தெனைக் காத்திடுவாய்.


பலரும் பயனுற பணி பல புரிந்தேன்

பயம் ஏன் பரமா, பலம் நீ தருவாய். 


விரயம் இல்லா திரவிய திரட்டு

இறையன் புடனே இனிதே புரிந்தேன்.  


சாட்டை அடி இனி சகிக்கா தையா

சாகேத ராமா! அபயம் அளிப்பாய்.


உள்ளம் உருகிட உன்னுடன் உய்ந்தேன்

எள்ளளவும் இனி கவலை இல்லை.


பார்திவி மீட்டிட பாலம் அமைத்தாய்

பார் புகழ் நாதா, பார், கடைக் கண்ணால். 


எப்பொழுதும் உன் நாமம் நாவினில், 

செப்படி வித்தை செய்திட வாராய்!

தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய்

அப்படியே வந் தெனை ஆட்கொள்வாய்.


Note: This poem (originally in Telugu) was penned by Bhadrachalam Ramadasu, when he was jailed for supposedly pilfering government tax money ( belonging to the Sultans) and diverting them to building temples for Rama. He was chained, flogged and put to unending torture. He believed that he only used the money, rightfully, for the right causes.  

 

உய்ந்தேன் - வாழ்ந்தேன் ; எள்ளளவும் - சிறிதும்; பார்திவி - சீதா பிராட்டிக்கு மற்றோரு பெயர்; செப்படி- magic; தப்படி- காலடி அளவு; தப்படியில் ஒரு தாயை உயிர்த்தாய் - அகலிகை மோட்சம்; இராமன் அவளை தாயாக பாவித்தான் 

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...