இரு கை வேடத்து இராகவனின் நாமம்
இரு க்கையில் எங்கும் இனியதோர் கீதம்.
இரு கை கூப்பி இதயம் நெகிழ்ந்து நான்
இரு மாப்பெலாம் இட அவனின் பாதம்.
உலக வாழ்க்கை எளிதாய் உய்வித்திடும் நாமம்
அலகிலாப் பிழைகளையும் அழித்திடும் நாமம்
புல னைந்தையுமே புடம் போட்டிடும் நாமம்
கல னாதிபனின்றும் எமைக் காத்திடும் நாமம்.
நாக்கின் நுனியில் நித்தம் நாரணன் திருமொழி
காக்கின் வரும், கனகமும் காணியும் நம் வழி
நோக்கின், நொடியில் மலையும் மடுவாய் மாறிவிடும்
கோர்கின், உடலும் உள்ளமும் இராம நாமத்துடனே.
உமை யவளுக்கும் கூட உவகை அளித்த நாமம்
நமை ஆட்கொண்ட வன்மீகனின் மோகம்
தமை சூழ் பாவமனைத்தும் தகர்த்திடும் வேகம்
இமைப் பொழுதில் கிடைத்திடும் மோட்ச போகம்.
மதனின் பாணத்தையும் உடைத்திடும் நாமம்
அதனின் அழகால் அமிழ்த்திடும் நாமம்
பதமாய்ப் பாவம் அனைத்தையும் எறித்து - பல
விதமாய் பலன் தரும் பகவனின் நாமம் .
ஆயக் காலைகள் அனைத்திற்கும் ஆசான்
தீயத் தாடகையைத் தீர்த்திட்ட தீர்க்கன்
மாயை ஆறும் மனம் அண்ட விடாது காக்கும்
தூயவன் அவனின் தொழு நாமம் கொண்டு.
இரு கை வேடத்து- கைகள் இரண்டிலும் யானை பலம் கொண்ட; கலனாதிபன் - யம தர்மராஜன்; வன்மீகன் - வால்மீகி முனிவர்; மாயை ஆறு - காம, குரோத,லோப, மோஹ, மத, மார்சர்யம்.
No comments:
Post a Comment