Monday, December 18, 2023

வெறிச்சோடிய கிராமங்கள்

அம்மன் சிலையும் ஆடிப் பெருக்கும்

தம்மக்களின் போக்கும் வரத்தும்

வெய்யிலிலும் ஓங்கிடும் சந்தை ஆரவாரமும் 

அய்யன்னார் கோயில் அரிவாளும் இன்று 

ஆளே இன்றி அடங்கியதேன்?


வைகரை வயல் வெளியும் வயிறாரப் பழஞ்சோரும்

தைப் பொங்கல் திருவிழாவும் தையலாள்த் திருவலமும்

மையத்து ஆலமரத்தடி மையம் கொண்ட பஞ்சாயத்தும்  

வையத்தார்க்கும் உணவளிக்கும் தானியக் கிடங்கும்

கைக்கிளையின் கதி எய்ததேன்?


தாழக் கட்டிய தாவணியும் கொலுசொலியும் 

ரேழி கடந்தபின் ரெட்டை முற்றமும் 

தோழருடன் தொய்வில்லா ஆல விழுது ஆட்டமும் 

வாழ வைத்த பண்ணையும் வழிப்போக்கன் திண்ணையும்

ஊழ் வழி சென்று  உறங்கியதேன்?


பாழடைந்த வீடுகளும் பழுதடைந்த வண்டிகளும்

காழ்ப்புண்ர்ச்சி கவ்விய கண்களுடன் சிறாரும் 

தோழன் தோள் தேடி ஏமாறும் ஏரும்

வாழா வெட்டியாய் வாடிடும் வீதிகளும்

நிதர்சனமாய் இன்று நிற்பதுவேன்? 


மண்ணும் காற்றும் நீரும் துறந்து

மருதம் துறந்து எருதும் துறந்து

பெரிதும் உவந்த எம் பேரிள மக்கள்

பெருமை ஈட்டிட பெருங்குடி பெயர்த்து  

நகரம் பால் இன்று நகர்ந்ததேன்?


-திலீப்




   

   

  

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...