தில்லை அம்பலத்தில் திகழும் பெருமான்
இல்லை என்போர்க்கு இரைக்கும் கனவான்
புல்லையும் புலியையும் புலையரையும் காப்பன்
எல்லாத் திசையும் எழுந்தருள் வானே.
ஆனந்தத் தாண்டவம் ஆடும் தினம் இது - நமை
வானத் தலத்தோன் வாழ்விக்கும் தினம் இது
தான் எனும் அகந்தை தகர்ந்திடும் தினம் இது
கானத்துடனே சிலம்பொலி கேட்பின்.
சிற்றம்பலம் தனில் சிவனின் உருவகம்
பொன்னம்பலம் தனில் பார்வதி உருவகம்
மின்னம்பலம் தனிலோ மாயவன் உருவகம்
மன அம்பலதில் நிறுத்தி வைப்போம்
திருவா திரையில் பெருமான் பேரில்
ஒருவாய்க் களியை உண்டு மகிழ்வோம்
வருவான் ஒரு நாள் வரம் பல அளித்திட
தருவான் தாவர சங்கம விடுதலை.
No comments:
Post a Comment