Friday, January 19, 2024

 காலைப் பொழுது

==============


மையிட்ட  நயனங்கள்  மலரிட்ட கூந்தலுடன்

நீரிட்ட  துளசிக்கு நிறையிட்ட மாதர் தம்

பொட்டிட்ட முகத்தினில் புன்னகை பொழிந்திட

பொடியிட்ட கோலமிது, வைகரை இதுவன்றோ!


ஏர் கொண்ட உழவன் தன் எரு கொண்டு வயலினை

சீர் கொண்டு, பின் திறக்க, ஊர் கொண்ட மதகோ

நிறங் கொண்ட கதிரவனை நீர் கொண்டு வரவேற்க,

உளங் கொண்டு நேர்ந்திடும் நேரமே  இதுவன்றோ!


நீராடி கோவில் முன் நிழலாடும் பக்தன் தன்

போராடிப் பெற்ற செல்வம் போகாதிருக்க வேண்டும் முன்னே

ஊராடிக் களித்திடவே ஊர்க்குருவி வட்டமிட்டு

உரையாடி துயிலெழுப்பும் காலைதான் இதுவன்றோ!


-திலீப்


No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...