Saturday, June 22, 2024

என்னையே நான்

 என் நேரம் வந்தது; மகிழ்ச்சியுடன்

என்னையே  நான் வரவேற்றேன்.

 

என் இல்லத்தின் கதவினும், 

என் கண்ணாடியிலும்,

ஒன்று மற்றொன்றை 

வரவேற்கும் பாவனையுடன்.


மறந்திருந்தேன் என்னையே 

மற்றவருக்காக.


மறைத்திருந்தேன், 

மனக் கிளர்ச்சிகளை .


என் இதயத்தை திருப்பி கொடுத்தேன் 

அதன் சொந்தமானவனுக்கு.

என்னை எப்போதும் நேசித்து -பின் 

எங்கோ, எப்போதோ தொலைத்தவனுக்கு.


புத்தக அலமாரியிலிருந்து எடுத்துவைத்தேன்,

புகைப்படங்கள், துடிக்கின்ற நினைவுகள்- என் 

உருவத்தை கண்ணாடியில் இருந்து. 

உரித்தெடுத்து உட்கார்ந்தேன். 


வாஞ்சையுடன் சோறூட்டி 

வரவேற்றேன்  என்னையே நான். 

மீண்டும் நேசித்தேன் , 

என்னுள் புதிதாக வந்த 

என்னையே .


என் நேரம் வந்தது; மகிழ்ச்சியுடன்

என்னையே  நான் வரவேற்றேன்.


No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...