Sunday, June 23, 2024

'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்

 கம்பன் வார்த்தை விளையாட்டு!! கம்பனுக்கு ஈடு கம்பனே!!!

========================


'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;

'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;


'அன்றே' என்னின், அன்றே ஆம்;

'ஆமே' என்னின், ஆமே ஆம்;


'இன்றே' என்னின், இன்றே ஆம்;

'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;


நன்றே, நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!


===========================


இந்தச் செய்யுள் கடவுள் வாழ்த்து. 


'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;

'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;


நைனா, நீ அது ஒண்ணுதான்ன்னு நென்ச்சா

மெய்யாலுமே ஒண்ணுதான். 


நெறியான்னு நெனக்கறியா..  

அப்போ நெறியாதான்...


'அன்றே' என்னின், அன்றே ஆம்;

'ஆமே' என்னின், ஆமே ஆம்;


நிர்குணப் பிரமன் என்று நினைக்கிறாயா?

அவ்வாறே!

"இல்லை, சகுணம்" என எண்ணூகிறாயா?

அவ்வாறே!


'அன்றே' என்னின், அன்றே ஆம்;

'ஆமே' என்னின், ஆமே ஆம்;


கண்ணதாசன் கம்பன் கிட்ட களவாடின இடம்! 

"உண்டென்றால் அது உண்டு.

இல்லையெறால் அது இல்லை".


நன்றே, நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!


நைனா, உனுகு எது கரீட்னு தோணுதோ,

அத்த புட்சுக்கோ!

ஆனா பாரு, என் கிட்ட ராங் காட்டாத, இனா?

என் வயி ...  தனி வயி, வாத்யாரே!!

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...