Thursday, September 10, 2015

பகுத்தறிவு

என் நண்பன் வினவினான்
==================
பகுக்கும் அறிவின் துணைக்கொண்டு - ஆய்ந்து
தொகுத்த முடிவின் பயன்கண்டு - பார்
வகுத்த நெறிதம் மகிழ்ந்திட்டால் - பாழ்
மதத்தால் வருமோ பயன் ?


என் பதிலோ இப்படி
==================
அறிவுக்கு அப்பாலே ஆண்டவன் - அவனை
அறிவது பகுத்தலால் ஆகாது - எனவே
நெறியிற் கடந்து உணர்வோம் - அது
அறிவும் மதமும் அறியாதது.

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...