Saturday, September 5, 2015

நீ குருவா இல்லை தெய்வமா?

நீ குருவா இல்லை தெய்வமா?
========================

நதியினிலே நீராடும் நந்தவன கோபியர்கள்
கதிகலங்க ஆடைகளைக் களவெடுத்து மறைத்தாய்
மான அவமானம் ஆத்மாவுக்கு இல்லையென்று 
போன போக்கிலே  பாடமாய் நீ  உறைத்தாய்.

கண்ட மண்னைத் தின்றுவிட்டு  யசோதைக்கு நீயோ   
உண்ட வாயை வாகையுடன்  திறக்கக் காட்டினாய்
அண்ட சராசரமும் அதனுள்ளே அடக்கினாய்
பிண்ட முள்ளேயே பிரம்மத்தை  தேடு என உரைத்தாய். 

உரி வெண்ணை திருடி நீ உரிமையுடன் தின்றாய்
பறி கொடுத்த கோபியர்க்கு இதழ்முத்தம் அளித்தாய்
கரிக் கண்ணா பார்முழுதும் ஆனந்தத் தாண்டவமாய்
சரி யான பாதையிலே போகும்படி போதித்தாய்.

குரு வான சாண்டிபணி முனிக்கு நீ அடங்கினாய்
மறு பேச்சு இல்லாமல் கட்டளைக ளேற்றாய்
குரு வாக அர்ச்சுனனை வழிகாட்டும் சாக்கிலே
தரு மதத்தை கீதைமூலம் தரணிக்குத்  தந்தாய்.

உனை இன்று எவ்வாறு போற்றிடுவேன் நானே
எனை நானே கேட்கின்ற கேள்வியிது நாதா.
மெய்ப் பொருள் விளக்கிடும் ஆசானாய் போற்றவா- இலை
உய் விக்கும்  கண்ணனாய்ச்  சேவித்து மகிழவா?

<3 div="" nbsp="">



      

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...