Saturday, September 5, 2015

Krishna in Pettai Tamizh

Teacher's Day (5thSep) in 2015 was also Janmashtami Day, the day Lord Krishna was born. I had penned two poems, one in English and one in Tamizh. They apear in separate posts.

I thought of a similar poem - this time in the voice of a pettai rowdy in a slum in Chennai.... here it goes

கிஸ்னா, நீ பேட்ட ரௌடியா , இல்லாங்காட்டி வாத்யாரா
=========================================

குஜ்லிங்க டிரஸ் எல்லாம் குளிக்கிரப்போ லவுட்ற
மெர்சல் ஆயி கத்தும்போ சிரிச்சுகினே குடுக்கற.
உசுருக்கு என்னிக்குமே ஒரு பீலிங்க்ஸ் இல்லன்னுட்டு 
அப்பீட் பண்ணி, பொறவால ரிப்பீட் ஆக்குற.

மண்ண துண்ணுபுட்டு நீயும் வூட்டுக்கு போனப்போ 
ஆத்தா படா பேஜாராயி  டப்பா லக்கிடி ஆடினப்போ 
வாய தொறந்து தில்லாலங்கடி வேலய காட்டிக்கின   
ஒலகத்தையே பயாஸ்கோப்ல  உடான்சு காட்டிக்கின.  

உரியில கீற வெண்ணை எல்லாம் லவட்டிகினு ஓடிகின 
தொரத்தி வந்த பொம்பளக்கு கில்மா ஒண்ணு குடுத்துகின 
சல்பேட்டா ஏத்திகினு மஜாவா இரு மச்சின்னு 
சாராய கட வாசல்ல சொண்டி கணக்கா பேசிக்கின.

வாத்யார்க்கு முன்னால மூடிக்கினு குந்திக்கின 
அவரு சொன்ன வேலையெல்லாம் பொத்திக்கினு செஞ்சுகின
முனியாண்டி மேட்டருக்கு முடிவு கட்டற சாக்குல 
குப்பத்துக்கே வஸ்தாது அப்டின்னு காட்டிக்கின. 

நைனா, இன்னிக்கி சரக்குல கிக் கம்மி போல -
ஒன்ன இன்னா சொல்றதுன்னு படா கன்பீசன்பா
பேட்டகே நீ வஸ்தாதா, தோஸ்த்துக்கெல்லாம் தோஸ்தா,
இல்லாங்காட்டி வாத்யராக்கு வாத்யாராவே  கீறியா?

   -Dilip-
       

No comments:

இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும் ஒரு நினைவு.

 இது தமிழ் மண்ணில் எந்நாளும் மலரும்  ஒரு நினைவு.  சுமார் எண்ணுறு ஆண்டுகளுக்கு முன், கொல்லிடம் ஆற்றங்கரையில் வாழ்ந்தோர் அங்கிருந்த பெருமாளின்...