Wednesday, November 26, 2025

எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காப்பது எப்படி?

அங்கும் இங்கும் நெருப்பு—இதயத்தைக் காப்பது எப்படி?


இதயம் போகும் பாதையில்  எழும் இடி சுவர்கள்—

இவற்றை இடிக்க தைரியம் வரவழைப்பது  எப்படி?


துயரில் திளைக்கும் ஆயிரம் பாடல்கள் உள்ளே உள்ளது,

துடித்துச் சிதைந்த யாழை—தொட்டு இசைப்பது எப்படி?


வலம்  வரும் நினைவுகள் சுமை என்றால் சுமக்கலாம்,

வாழ்வே சுமையாக நின்றால்—நான் தாங்குவது எப்படி?


அன்பின் நெறியை நான் ஆற்றிக் காக்க ஆசை தான்,

ஆனால் இந்த உலகில் அதை நிறைவேற்றுவது  எப்படி?

No comments:

மாயை

 பொலிந்த உலகின் பொய்மை கண்டே பொங்கி வெடித்தது உள்ளம் — ஹா! நம்பி நெஞ்சில் நஞ்சே வார்த்தாய், நகைத்த முகத்தில் மாயை தானே! சரளம் சொற்களால் செரு...