Sunday, September 27, 2026

கண்ணீர் கவிதையாகிறது!

விழிகள் வழியே

வழிந்திடும் துளிகளின்

விலாசம் உலகறியாது—

விழி மட்டும் அறியும்!


கண்கள் ஏன் கலங்குகின்றன?

காரணம் என்னவென்று

கணக்கிட்டுச் சொல்லிவிடும்

அறிவியல் இல்லை!


இது விதிகளால்

விளக்க முடியாத விஷயம்;

இதயத்தின் மொழிக்கு

இலக்கணம் ஏது?


அறிவியல் அல்ல இது…

அன்பியல்!


அதனால்தான்—

வார்த்தைகள் தோற்குமிடத்தில்

விழிகள் பேசுகின்றன;

விழிகள் பேசுமிடத்தில்

கண்ணீர் கவிதையாகிறது!

No comments:

" எனக்கு நீதாண்டா கடவுள்!"

ஊர்: மண்டபம். இந்தியாவின் முக்கிய நிலப்பரப்பிலிருந்து கிழக்கு நோக்கி நீண்டுசெல்லும் ஒரு குறுகிய நிலப்பகுதி. படிப்படியாகக் குறுகி, ஒரு முனையா...