Sunday, April 28, 2013

சித்திரைப் பௌர்ணமி


சித்திரைப் பௌர்ணமி நிலவொளியில் மிளிரட
ஆற்றங் கரையில் ஆரவாரம் அடங்கிடிவிட
படுகையின் நாணல்கள் ஒய்யாரமாய் அசைந்திட
நாம் மட்டும் நிலாச்சோறு நேசித்துப் புசிதோம்.

இரவின் கருப்பினை நிலவொளி தகர்த்தது
நடுநிசியின் நிசப்தத்தை ஆந்தையோ கலைத்தது
நீரின் சலசலப்போ மையலுக்குப் பண்பாடியது
மனதின் தணலைத் தென்றலோ ஊதியது

இனிமையான இரவு இதமான  கனவு
திரும்பி வருமோ இன்பம்  இந்த அளவு
முடிந்த  நாட்களைத் திரும்பப் பெறுமோ
மூடிவிட்ட இதயத்தில் காதல்தான் தளிருமோ?


No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...