Tuesday, April 30, 2019

அந்த நாளைத் திருப்பிக்கொடு

பாட்டியுடன் போட்டி போட்டுப்
பல்லாங்குழி ஆடியது
பரம பதத்தின் பாம்புக்கடி
பரம துக்கம் பகின்றது.  

அத்தைப் பாட்டியுடன்
அளவளாவிய விஷயங்கள்.  
சிறிய இரவுகள்
சீரியக் கதைகள்.

அக்னி நட்சத்திரத்திரமும்
ஆலங்கட்டி மழையும். 
கப்பலோ காகிதத்தில்
கனவுகளோ கப்பலில்.

வானொலி வரவழைத்தது
காணொளி , கண்முன்னே.
தாத்தா திட்டும்வரை
குளத்தினுள்ளே கும்மாளம். 

வேகாத வெய்யிலில்
வெட்டுக்கிளி பிடித்தது.
எட்டா தூரத்தில்
பட்டாம் பூச்சிகள்.

தேரையைத் தான் தேடி
தெருவெல்லாம் அலைந்தது
பசுவிற்கு தாகமாம்,
கழுநீரைக் காட்டியது. 

எட்டாக் கனிகளோ
ஒட்டுக்கொய்யா மரத்தில் 
கம்பளிப்பூச்சி கருதி
எம்பித் தோற்றது.

திருமணக் கூட்டத்தில்
ஓடிப்பிடித்து ஆடியது.
வயிறு முட்டத் தின்று, பின்
வயிற்றுப்போக்கில் வாடியது. 

வந்தது  தேரோட்டம்
வாட்சு மிட்டாய், கையிலே.
தெப்பத் திருவிழாவில்
ரங்க ராட்டிணங்கள்.

கரிவண்டிப் பயணத்தில்
ஓரு வண்டி உணவுகள்.
ஊர் எல்லை தாண்டுகையில்
ஓராயிரம் உணர்வுகள்.







  

  




  

Tuesday, April 23, 2019

வறுமையும் செம்மையும்

அன்று -
சாப்பிடுவதற்காக
நடந்தேன்

இன்று -
சாப்பிட்ட பின்
நடக்கிறேன்   

प्यार का बक़ाया

बात-ए-दिल मैंने लबों तक़ लाया था
आँखें मिली, लो, सब कुछ गवाया था

फहराते पलकों का इशारा नाज़नीन था
लम्हें-ए-फ़िराक को वापस बुलाया था

दिल के कोने कोने में छान ज़रूर मारा
कुछ मिला, पर प्यार का एक साया था 

जो दिन में दे नहीं पायी, रात में दे गयी 
दिल कभी नहीं भरा, प्यार का बक़ाया था 


Friday, April 12, 2019

எனக்குள் உன்னை

கனவெனும் கானகத்துள்
கண்கள் காணா இடத்தில்
காண்கிறேன் உன்னை.

மனமெனும் மாயாவுலகில்
உனக்கென்று ஓரிடம்
எனக்குள் உன்னை.      

महफ़िल में सलाम लूँ

मोहब्बत बोलता है कि मैं तेरा हाथ थाम लूँ
हक़ीक़त बोलता है कि मेरा हाथ में जाम लूँ

शराब में जितना भी ग़र्क़ क्यूँ  न हो जाऊं 
दिल चाहता है कि बार बार तेरा ही नाम लूँ

मेरी वज़ह से तुम्हें तक़लीफ़ कम ही होगी
बस यूँ ही तुमसे मेरा जीने का काम लूँ

तेरी आँखों की मस्ती ने नग़में बहुत दी हें
उन्हीं नग़मों से महफ़िल में सलाम लूँ

Tuesday, April 9, 2019

जलाल कर दी


महफ़िल में तेरी आमद ने कमाल कर दी
तेरी अदा ने हर मिसाल को मुहाल कर दी

बत्ती सब बुझगये तो कोई बात नहीं
तेरी सूरत ने सारी महफ़िल को जलाल कर दी

இறைவா, வேறெவர்?

சிந்திக்கவும்
நிந்திக்கவும்
உன்னை விட்டால்
இறைவா, வேறெவர்?

அந்தியிலும்
அதிகாலையிலும்
புந்தியில் வைத்துப்
போற்றிட
இறைவா, வேறெவர்?

Sunday, April 7, 2019

பிரிய மனமில்லையே!

கன மழை.
ஒரே குடை.
ஈருடல்களின்
ஈர்ப்பு.

குடையை விட்டு
மழை பிரிந்தது.
இடையை விட்டு
பிரிய மனமில்லையே!     

கல்லும் சிற்பமும்

உளி யால் அடிபட்டு
உடையும் போதும்

துளி யும் வலி யால்
துவளாப் பாறை

ஒளி விடும் சிற்பம்
உதிக்கும் போதோ

களி கொண்டு
வெட்கி உதிர்கிறதே! 

    

புன்னகை

அதரங்கள்
அரங்கேற்றுகின்றன
புன்னகை
நாடகத்தை.

உள்ளத்தின் வலியை
உள்ளேயே
சிறைப்படுத்த.
   

இழந்தேன் என் செவிப்புலனை

உன் வாயிலிருந்து
உதிர்ந்தன வார்த்தைகள்.

ஆனால்

விழிகளின் ஜதியிலும்
இதழ்களின் இலையத்திலும்

இழந்தேன்
என் செவிப்புலனை     

बोरी भारी है


चौंक मत जाना , कि तुम्हारी बोरी भारी है
तुम्हारे पास मेरा कुछ सामान रह गया है

यहां मेरा भी दिल ग़म से भारी है
तुम्हें पाने का मेरा अरमान रह गया है  

सुकून की हवेली





हर परेशानी में मेरी ताक़त की हथेली हो
इस वीरान दिल का सुकून की हवेली हो

मुझे अब रास्ते से भटकने की चिंता नहीं
कदमें मिलाकर चलती मेरी सहेली हो


ग़म-ए-ज़िन्दगी का सदमा बहुत गहरा है
मुझे तसल्ली देनेवाली एक अखेली हो

तुम्हें पहचानने की कड़ी कोशिश की हूँ 
न जाने, अब तक तुम एक पहेली हो

Thursday, April 4, 2019

ज़रुरत



मेरे यारों का सदमा-ए-लव्ज़ गहरा है
उस दाग को मिटा नहीं पाऊंगा

पर उन्हीं चार शख्स चाहिए भी - क्यूंकि
खुद का जनाज़ा उठा नहीं पाऊंगा 

நரசிம்மா, வரு, பரம பிதா!

நரசிம்மா, வரு, பரம பிதா! சுத்த சிந்தை சிறப்பு நிதா! இசைதருமோ, உனது கடைசின் போதா? இருள் பொலிக்கும் எங்கள் விருட்ச நீயே! அறிவொளி ஈசனே, ஆதிபுரு...