Wednesday, June 12, 2013

கானல் நீர்




மடமையினால் மாயையினால்
உடமையென ஆக்கிக்கொண்டேன்
மூத்தோர் சொல் கேளாமல்
மூடுபனியில் முடங்கிவிட்டேன்

புறஅறிவுப் பிழையாலே
பாசவலைப் பிரதிபிம்பம்
தெரிந்ததாலே தெரியவில்லை
பிரம்மம் எனும் பேரின்பம்

இவ்வுலக பந்தத்தினை
ஈசனவன் போக்கட்டும்
இருள்சூழ் ஆத்மாவினை
அருள் ஒளி ஆக்ரமிக்கட்டும்



No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...