Wednesday, June 12, 2013

மாய மோகம்



ஆழ்ந்திருக்கும் உறக்கத்தில்
தாழ்ந்திருக்கும் உத்வேகம்
விழித்திருக்கும் காமத்தில்
வீழ்ந்திருக்கும் விவேகம்.

நெகிழ்ந்திருக்கும் உணர்ச்சிகளோ
உமிழ்ந்திருக்கும் ஊழ்வினையை
வாழ்ந்திருக்கும் தர்மநெறியோ
உழண்டிருக்கும்  சங்கடத்தில்

மகிழ்ந்திருக்கும் மதியினிலே
சேர்ந்திருக்கும் சிற்றின்பம்
புகழ்ந்திருக்கும் திருநாமத்தால்
திகழ்ந்தோங்கும் பேரின்பம்.

No comments:

கீத சக்கர

கீத சக்கரச் சவுக்கருளியெம் குருகுகாப் பெருமானை சீத நல்பட நாமமலர்கழல் தொழுதெழு பண்ணுமே! கீதமருந்தின் அன்பளித்திடு கீர்த்திச் செம்மையே ஏதுமில்...