Tuesday, April 30, 2019

அந்த நாளைத் திருப்பிக்கொடு

பாட்டியுடன் போட்டி போட்டுப்
பல்லாங்குழி ஆடியது
பரம பதத்தின் பாம்புக்கடி
பரம துக்கம் பகின்றது.  

அத்தைப் பாட்டியுடன்
அளவளாவிய விஷயங்கள்.  
சிறிய இரவுகள்
சீரியக் கதைகள்.

அக்னி நட்சத்திரத்திரமும்
ஆலங்கட்டி மழையும். 
கப்பலோ காகிதத்தில்
கனவுகளோ கப்பலில்.

வானொலி வரவழைத்தது
காணொளி , கண்முன்னே.
தாத்தா திட்டும்வரை
குளத்தினுள்ளே கும்மாளம். 

வேகாத வெய்யிலில்
வெட்டுக்கிளி பிடித்தது.
எட்டா தூரத்தில்
பட்டாம் பூச்சிகள்.

தேரையைத் தான் தேடி
தெருவெல்லாம் அலைந்தது
பசுவிற்கு தாகமாம்,
கழுநீரைக் காட்டியது. 

எட்டாக் கனிகளோ
ஒட்டுக்கொய்யா மரத்தில் 
கம்பளிப்பூச்சி கருதி
எம்பித் தோற்றது.

திருமணக் கூட்டத்தில்
ஓடிப்பிடித்து ஆடியது.
வயிறு முட்டத் தின்று, பின்
வயிற்றுப்போக்கில் வாடியது. 

வந்தது  தேரோட்டம்
வாட்சு மிட்டாய், கையிலே.
தெப்பத் திருவிழாவில்
ரங்க ராட்டிணங்கள்.

கரிவண்டிப் பயணத்தில்
ஓரு வண்டி உணவுகள்.
ஊர் எல்லை தாண்டுகையில்
ஓராயிரம் உணர்வுகள்.







  

  




  

No comments:

The World Series

I don't know how many of you had watched the World Series match last night, between KKR and King's Punjab. I did, fully, to the last...