அன்பே! என் பெயரை அகத்தின் ஆலயத்தில்
அழகாய் எழுதிடு ஆழ்ந்த காதலால்
இன்பக் கீதமெல்லாம் இதயம் நிறைய
இசைக்கும் சிலம்பொலியில் ஏந்தி ஒலிக்கட்டும்
அரசி! உன் கோயில் அகன்ற முற்றத்தில்
அமரும் என் கிளியைக் காவல் காத்திடு
பரிவால் அணைத்திடு பாசம் பொங்கிட
பொன்னின் வளையலில் பூட்டு என் பரிசை
மலரின் மொட்டொன்றை மருவச் செய்வாய்
மணக்கும் கூந்தலிலே மறவா நினைவாய்
நிலவும் சிந்தூரம் நெற்றி அணியும்
நினைவாய் உன்னுடலின் நறுமணம் ஆகும்
உயிரின் இன்பமும் உடலின் துன்பமும்
ஒன்றாய்க் கலந்திட ஓங்கும் பேரன்பில்
தயங்கா நெஞ்சமே தழுவிக் கொள்ளடி
தனித்த என் உயிரை தாங்கும் தஞ்சமே
No comments:
Post a Comment