Wednesday, June 17, 2026

நீ சூரியனா, இல்லாங்காட்டி "சிங்கம்" சூரியாவா?

 காத்தாலயே கனலு மாரி 

கரீட்டா  எந்திரிச்சு வந்து,

படிக்கிற பசங்களுக்கு லைட்ட 

பாஸ் பண்ணி 

பேட்டகே ஃபேமஸ் ஆயிடுற நீ.


தேவருங்க எல்லாம் ஒன்ன பாத்து 

"டேய்! சாமி வந்ட்டான்டா"ன்னு கும்புட,

கில்லாடி வேல காமிச்சு, நைனா

கிள்ளிட்டா நெஞ்சைய !


செவந்த கதிரு கைங்க இந்த 

செம்  மண்ண தொட்டு தடவ,

அப்பா டக்கரா  பரவி சும்மா 

அல்ட்டாம ஒளி அட்சடா.


ஸுடு ஸுடா சுட்டாக்கூட நீ 

சைதாபேட்ட கிரி கிரி

கோடை வெய்யிலு காட்னாலும் நீ 

கோயம்பேடு வடகறி.


டங்குவாரு கூட வெய்யிலுல  உன் 

கலராவே  மாறிட்ச்சு ,  மச்சான்.

டாஸ்மாக்கு இல்லாமையே படா 

கிக்கு ஏறிட்ச்சு ,  மச்சான்.


சுத்திக்கினே இருடா

சூளூர் பேட்ட  வஸ்தாது 

செம்மயான ஒன்  லுக்குக்கு  

சென்னையே பத்தாது.



No comments:

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...