Friday, June 26, 2026

முருகன் காவடி சிந்து

 கந்தனே போற்றுவோம் கடவுளே முருகா

கந்தமலர் சூடிடும் கருணையே கந்தா


வல்லவனே விரைந்திங்கு வாரடா தேவா

வல்லடி வணங்குவோம் வரமொன்று வேலா


செந்தில் ஆண்டவனே சிவகுமரன் முருகா

செந்தமிழ் பாடுவோம் சேவகர் நாதா


பண்ணிய பாவங்கள் பரிந்தொழி தேவா

பண்பிலா நானும் பணிகின்றேன் முருகா


தண்ணருள் தாராயே தாயினும் நாதா

தண்மலர் தூவிட தாழ்ந்தேன் குமரா


மண்ணிடை மாயையில் மறுகுவோம் தேவா

மண்ணை விட்டேற வழிகாட்டு முருகா

No comments:

வாழ்க்கை எனும் பயணம்

 வாழ்க்கை சொல்லும் கதையெல்லாம் நாளை மறந்திடுமே, வாழ்ந்த தடங்கள் நாமில்லாமல் மண்ணில் மறைந்திடுமே! கல்லாய் கால்கள் கனத்தாலும்  நின்று விடாதே, ...