Monday, June 29, 2026

முன்னே போ

தோணி செல்லட்டும் — துறை விட்டு நீங்கட்டும்

வாணி போல் ஓடும் வையகக் வைகை

பேணும் திசை தனில் பெருகிச் செல்லட்டும் —

ஆணி வேர் விட்ட அச்சம் அகன்றிடட்டும்!


கரையில் நின்றவர் கைகளை விட்டனனர்

துரையும் நண்பரும் தூரம் ஆயினர்.

வரையும் நினைவுகள் வலியுடன் மறையட்டும் —

நரையும் காலமும் நம்மை அழைக்கின்றன!


அலைகள் தாக்கட்டும் — அஞ்சாது செல்லட்டும்

கலங்கரை விளக்கம் இல்லா கடல் கண்டாலும்

விலங்கா நீரோட்டம் வழி காட்டும் — அதனை

நலங்கொள் நெஞ்சத்தால் நம்பி முன்னேறிடு!


ஆறே நீ என்று அறிந்திடு உள்ளத்தில்

தோற்றம் வேறன்று தோணியும் நீரும் இல்

போற்றும் பயணமும் பயணிக்கும் உயிரும்

ஏற்றம் ஒன்றே என்று இதயம் உணரட்டும்!


மனிதன் உணரட்டும் — தோணியும் இல்லை

நதியும் இல்லை — நாமும் இல்லையே

ஒதுங்கா ஓட்டம் ஒன்றே உண்மை —

முதுகு திரும்பாமல் முன்னே போகட்டும்!

No comments:

முன்னே போ

தோணி செல்லட்டும் — துறை விட்டு நீங்கட்டும் வாணி போல் ஓடும் வையகக் வைகை பேணும் திசை தனில் பெருகிச் செல்லட்டும் — ஆணி வேர் விட்ட அச்சம் அகன்றி...