Thursday, June 25, 2026

கணபதி வேண்டல்

 கணபதி உனக்கே கைகுவிக்கின்றேன்

கணமும் மறவேன் கமலத் திருவடி

கணிந்தெனை தேற்று கரிமுகத் தெய்வா

கண்களில் ஒளிரும் கதிர்நீ அல்லவா


வல்லமை நீயே வாழ்வினில் துணைவா

வல்லுயிர் உணரும் வான்பொருள் நீயே

வல்லவர் நெஞ்சில் வாழும் கணபா

வல்லடி வணங்கேன் வாழ்த்துகின்றேனே


பண்ணிய பழியெல்லாம் பரிந்தொழி ஐயா

பண்பே இல்லா பாவியேன் நானும்

பண்ணொலி இனிக்கும் பரம்பொருள் நீயே

பண்ணில் உனைப்பாடும் பாக்கியம் தாராய்


தண்ணருள் தாராய் தாழ்ந்தவன் என்னை

தண்மலர் தாளில் தனிந்து வணங்கேன்

தண்ணிய ஒளியே தர்மத்தின் வழியும்

தண்மையால் காப்பாய் தாயினும் மேலே


No comments:

The rise and rise of Luckin' Coffee

 Luckin Coffee. Does this sound a bell or ring a bell to any of you? I bet not. For most people outside of China and select parts of Southea...